ராவணனின் நில மோசடி அம்பலம்: எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் லக்ஷ்மணன் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் ராவணனின் நில மோசடி உண்மைகள் தெரியவந்த நிலையில், அவனுக்கு எதிராக உதவியாளர் லக்ஷ்மணன் முடிவெடுக்கத் துணியும் திருப்பங்கள் வெளியாகியுள்ளன.


ராவணனின் நில மோசடி அம்பலம்: எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் லக்ஷ்மணன் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில், ராவணனின் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருவதுடன், அவனுக்கு எதிராக அவனது உதவியாளர் லக்ஷ்மணன் முதல்முறையாக ஒரு முடிவை எடுக்க முன்வரும் திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறையில் உள்ள குணசேகரனைச் சந்திக்கும் வழக்கறிஞர்கள், காவலர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் அவரைப் பார்க்க வந்துள்ளதாகவும், தம்பிகள் பார்க்க வரும்போது இயல்பாகப் பேசிவிட்டால் மீண்டும் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதால் வழக்கை இழுத்தடித்து நீதிபதியை நிலைகுலையச் செய்யுமாறும் ஆலோசனை வழங்குகின்றனர்.

மறுபுறம், நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதுடன் தனது பணத்தையும் ராவணன் சுருட்டிவிட்டதை அறிந்து கதிர் கடும் மனவேதனை அடைகிறார். விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாகப் புலம்பும் கதிரை சமாதானப்படுத்தும் சக்தியும் ஜனனியும், அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளரைச் சென்று சந்திக்கின்றனர்.

அப்போது தனக்கு இந்த விவகாரம் எதுவும் தெரியாது எனக் கூறும் உரிமையாளர், உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர் என நாடகமாடிய நபரைப் பிடித்து விசாரிக்கும்போது, ராவணனின் உத்தரவின் பேரிலேயே அவ்வாறு நடித்ததாகவும் தனக்கு 20 சதவீதப் பணம் மட்டுமே கிடைத்ததாகவும் கூறி அப்பணத்தைத் திருப்பித் தருவதாக அவர் ஒப்புக்கொள்கிறார்.

இத்தகவல்களை மருத்துவமனையில் உள்ள மதிவதனியிடம் தெரிவிக்கும் ஜனனி, மீதமுள்ள 80 சதவீதப் பணம் ராவணனிடம் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் ராவணனின் உதவியாளர் லக்ஷ்மணன், இதுவரை ராவணனை மீறி எதையும் செய்யாத தான், தற்போது முதல்முறையாகச் சுயமாக ஒரு முடிவை எடுக்கப்போவதாகத் தெரிவிப்பது கதையில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Cinema Seithi.
Cinema Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க