நடிகை துஷாரா விஜயனின் புதிய புகைப்படங்கள்: சமூக வலைதளங்களில் வைரல்
சார்பட்டா பரம்பரை புகழ் நடிகை துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சார்பட்டா பரம்பரை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பரவலான கவனத்தைப் பெற்ற இளம் நடிகை துஷாரா விஜயன், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற இவர், தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, வேட்டையன், வீர தீர சூரன் மற்றும் ஜி.டி.என் உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இவர் நடிப்பில் 'அல்மோஸ்ட் நல்லவன்' என்கிற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை துஷாரா விஜயன் பதிவிட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.








