அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? உறவினர் சொன்ன தகவல்! எப்போது விசேஷம்?

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உறுதி செய்துள்ளார்.

Published on: 28 Jun 2026, 10:19 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? உறவினர் சொன்ன தகவல்! எப்போது விசேஷம்?
அனிருத் - காவ்யா மாறன்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணம் குறித்த வதந்திகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி வந்தன. இந்நிலையில், நடிகரும் அனிருத்தின் உறவினருமான ஒய்.ஜி. மகேந்திரன், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.

நடிகை குட்டி பத்மினியின் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில், "அனிருத் ரொம்ப சாதுவான பையன். அவர் விரைவில் மிகப்பெரிய திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். நானும் கேள்விப்பட்டதை வைத்துத்தான் உறுதியாகச் சொல்கிறேன். அவர்கள் சூப்பர் ஜோடி" என்று கூறியுள்ளார்.

மேலும் காவ்யா மாறன் குறித்து பேசிய அவர், "அந்தப் பெண்ணும் சாதாரணமானவர் கிடையாது. ஒரு டீமையே ஹேண்டில் செய்யும் சாமர்த்தியம் அவருக்கு இருக்கிறது. அவருடைய அப்பாவின் தொழில் ஜீனை இவருக்குள் கொடுத்திருக்கிறார்கள். அந்த பிஸ்னெஸ் மைண்ட் இந்தப் பெண்ணுக்கும் இருக்கிறது. அனிருத்தும், அந்தப் பெண்ணும் சேர்ந்து மியூசிக் பிஸ்னெஸ் செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

காவ்யா மாறன், சன் பிக்சர்ஸ் மற்றும் சன் நெட்வொர்க்கின் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் ஆவார். மேலும், ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இணை உரிமையாளராகவும் செயல்படுபவர். இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக அறியப்படுகிறார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த ஆண்டு இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்த ஹை-ப்ரொஃபைல் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றன. திருமணம் வெளிநாட்டில் நடைபெறவும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன.

இதற்கு முன்னதாகவும் அனிருத் - காவ்யா திருமணம் குறித்த வதந்திகள் பரவியுள்ளன. கடந்த முறை இது போன்ற வதந்திகள் பரவிய போது, அனிருத் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், "கல்யாணமா? லோல்... கொஞ்சம் கூலா இருங்க பிரண்ட்ஸ், வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் இம்முறை காவ்யா மாறன் பெயர் அடிபடுவதால், அனிருத் அவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றவில்லை.

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் நாட்டு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

ஒய்.ஜி. மகேந்திரன் இந்த தகவலை உறுதி செய்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இரு குடும்பத்தினரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW