'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனை இன்று கரம்பிடித்தார். இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது.
மாடலிங் மற்றும் விளம்பரங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினுஷா தேவி, 'பாரதி கண்ணம்மா' தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்தார். மேலும், விஜய் தொலைக்காட்சியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வாழ்த்து மழை தொடர்ந்து வருகிறது.