நிவின் பாலி, மமிதா பைஜுவின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஒக்டோபர் 02 ஆம் திகதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


நிவின் பாலி, மமிதா பைஜுவின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்த மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான 'பெத்லகேம் குடும்ப யூனிட்', எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இத்தகவலை குறித்த ஓடிடி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரலாறு காணாத வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

திரையரங்குகளில் வெளியான 37 நாட்களில் உலகளவில் சுமார் 330 கோடி ரூபாயை வசூலித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகவும், மலையாளத் திரையுலகின் வரலாற்றுச் சாதனைப் படமாகவும் உருவெடுத்துள்ளது.

மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியாக்கப் பதிப்புகள் செப்டம்பர் 04 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகின.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, ஒக்டோபர் 02 ஆம் திகதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் டிஜிட்டல் வெளியீடு அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Cinema Seithi.
Cinema Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க