தென்னிந்திய சினிமாவின் முக்கிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியீடு

சர்தார் 2 மற்றும் பெத்லகேம் குடும்ப யூனிட் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் முக்கிய திரைப்படங்கள் இந்த வாரம் பல்வேறு முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.


தென்னிந்திய சினிமாவின் முக்கிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியீடு

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியான முன்னணித் திரைப்படங்கள் மற்றும் புதிய படைப்புகள் இந்த வாரம் பல்வேறு முக்கிய ஓடிடி தளங்களில் பார்வையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு தரப்பட்ட ரசிகர்களைக் கவரும் வகையில் அதிரடி, நகைச்சுவை, காதல் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைக் களங்களுடன் இந்தப் படங்கள் இணையவழித் தளங்களில் களமிறங்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரின் நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் 2 திரைப்படம் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு சர்வதேச அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மூத்த உளவாளியின் அதிரடி நகர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய #லவ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் டேட்டிங் செயலி நிறுவனங்களை நடத்தும் இருவருக்கு இடையிலான போட்டி மற்றும் காதல் மோதல்கள் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளன.

மலையாளத் திரையுலகில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கிரிஷ் ஏ.டி. இயக்கிய பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஜியோஹொட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

விபத்தொன்றில் காலை இழந்த பின்னரும் தளராது இந்திய மாற்றுத்திறனாளி உதைபந்தாட்ட அணியின் தலைவராக மீண்டெழுந்த வைஷாக் பெரம்பராவின் வாழ்க்கையைத் தழுவி, மம்மூட்டி முக்கிய பாத்திரத்தில் நடித்த பந்தடிக்காம் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் சுமந்த் பிரபாஸ் நடிப்பில் உருவான ரொமாஞ்சகம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், புதையல் வேட்டை மற்றும் புராதனக் கோவில் மர்மங்களை மையமாகக் கொண்ட மகேந்திரகிரி வாராஹி திரைப்படம் பிரைம் வீடியோ தளத்திலும், நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் அமீர் லாக் திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.

அத்துடன் தனஞ்சயா நடிப்பில் தாய்க்குச் செய்த சத்தியத்தைச் சுற்றி நிகழும் குற்றப் பின்னணி நகைச்சுவைக் கதையான மதர் பிராமிஸ் என்ற கன்னடத் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Cinema Seithi.
Cinema Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க