நடிகர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

மாரடைப்பால் காலமான நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published on: 27 Jun 2026, 01:12 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
நடிகர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பிரபல நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவையடுத்து, பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்யராஜ், இன்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், பின்னர் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தா என பல்வேறு துறைகளில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.

'சுவர் இல்லாத சித்திரங்கள்', 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றார்.

சமீபத்தில் சினிமா துறையில் தனது 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்திருந்த பாக்யராஜ், புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது கலைப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW