விஜய் பிறந்தநாளில் திரிஷா ஹார்ட் பிட் போஸ்ட் - அன்ஃபாலோ வதந்தி பொய் என்று தெளிவு!
திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடனான ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து, இதயத்தை தொடும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும் முன்னணி நடிகருமான விஜய், தனது 52வது பிறந்தநாளை ஜூன் 22 அன்று கொண்டாடிய நிலையில், அவருக்கு நடிகை திரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், இன்ஸ்டாகிராமில் அவரை அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் பரவிய வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடனான ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து, இதயத்தை தொடும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “To the person who makes it all worth it, HBD 00.00” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதை இந்த வாசகம் உணர்த்துகிறது.

இதற்கிடையில், விஜய்யை திரிஷா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததாக வந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது. ஏனெனில், திரிஷா முதலில் இருந்தே விஜய்யை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ததே இல்லை என்பது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அன்ஃபாலோ செய்ததாக பரவிய செய்தி அடிப்படையற்றது.
இந்நிலையில், விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. சங்கீதா, கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விஜய்க்கு மற்றொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், திரிஷா பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் சங்கீதா இடையே சமாதானம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறித்தும் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், திரிஷாவின் இந்த பதிவு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.