நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் இன்று பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

Published on: 08 Jun 2026, 03:39 pm
Updated: 7 days ago

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியுடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், இன்று (ஜூன் 8) தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அங்கு முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோவிலில் இருந்து வெளியேறும் போது, நடிகரைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சிவகார்த்திகேயன் தனது படப்பிடிப்புகளுக்கு இடையே ஓய்வு நேரத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு 18-ஆம் படி கருப்பணசுவாமிக்கு 5 அடி நீளமுள்ள அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் 26-வது திரைப்படமான 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகரின் பழனி யாத்திரை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW